மேலும் ஒரு மில்லியன் Sinopharm டோஸ்கள் இலங்கையை வந்தடைந்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

மேலும் ஒரு மில்லியன் Sinopharm டோஸ்கள் இலங்கையை வந்தடைந்தன

சீனாவின் Sinopharm கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகளே இவ்வாறு வந்தடைந்துள்ளன.

இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்திருந்தன.

அதற்கமைய அண்மையில் சீனா அன்பளிப்பு செய்த 5 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளிட்ட, கடந்த மார்ச் மாதம், சீனாவிடமிருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 6 இலட்சம் Sinopharm டோஸ் தடுப்பூசிகளுடன் இதுவரை மொத்தமாக 5.1 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment