கிழக்கு பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் - News View

Breaking

Wednesday, July 28, 2021

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

நூருள் ஹுதா உமர்

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இலவச கல்வியை பாதுகாத்தல், கல்வி இராணுவமயப்படுத்தலை தவிர்த்தல் எனும் தொனிப் பொருளில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பிரதான வளாக முன்றலில் நடைபெற்றது.

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் என்பவற்றின் வழிகாட்டலில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பவற்றின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கொவிட் தொற்று சுகாதார வழிமுறைகளைப் பேணி கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கத்தது.

No comments:

Post a Comment