18 வயதுக்கு குறைவான 45,000 சிறுவர்கள் வீட்டு வேலைகளில், அடுத்த வருட இறுதிக்குள் கட்டுப்படுத்துவதற்கு விரிவான திட்டம் - News View

Breaking

Wednesday, July 28, 2021

18 வயதுக்கு குறைவான 45,000 சிறுவர்கள் வீட்டு வேலைகளில், அடுத்த வருட இறுதிக்குள் கட்டுப்படுத்துவதற்கு விரிவான திட்டம்

நாட்டில் 18 வயதுக்குக் குறைவான 45,000 சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் சிறுவர் சனத் தொகையில் ஒரு வீதமாகும் என தெரிவித்துள்ள தொழில் திணைக்களம், இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இலங்கை தொடர்பில் திருப்தியடைய முடியும் என்றும் எவ்வாறாயினும் நாடு என்ற ரீதியில் அது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைய முடியாது என்றும் தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டை சர்வதேச சிறுவர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் ஆண்டாக சர்வதேச தொழில் ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.

அதற்கிணங்க அடுத்த வருட இறுதிக்குள் பாலியல் தொழில், போலி வீடியோ காட்சிகளில் சிறுவர்களை பயன்படுத்துதல், போதைப் பொருள் கடத்தல் போன்ற மோசமான நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை நாட்டில் முழுமையாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ள அவர் சர்வதேச தொழில் ஸ்தாபனத்துடன் இலங்கை அது தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment