மீட்டெடுக்கப்பட்டது வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான தகவல் தொடர்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

மீட்டெடுக்கப்பட்டது வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான தகவல் தொடர்பு

வட மற்றும் தென் கொரியா செவ்வாயன்று எல்லை தாண்டிய தகவல் தொடர்புகளை மீட்டெடுத்துள்ளதாக கூறியுள்ளது.

பியோங்யாங் எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்களை எல்லைக்கு அனுப்பும் ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தென் கொரியாவுடனான அனைத்து உத்தியோகபூர்வ இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளையும் வட கொரியா ஒருதலைப்பட்சமாக துண்டித்து விட்டது.

இந்நிலையில் உயர்மட்ட தலைவர்களுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, உள்ளூர் நேரப்படி ஜூலை 27 அன்று காலை 10:00 மணி முதல் இரு நாடுகளுக்கிடையேயான எல்லை தாண்டிய தகவல் தொடர்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பது "தென் வடக்கு உறவுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று தென் கொரியாவின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு கொரியாக்களின் தலைவர்களும் ஏப்ரல் மாதத்திலிருந்து தனிப்பட்ட கடிதங்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள், அவை நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இறுதியில் ஹாட்லைன் தகவல் தொடர்புகளை மீட்டெடுக்க ஒப்புக் கொண்டன என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

No comments:

Post a Comment