உரப் பிரச்சினையால் தேயிலை துறைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்கிறார் ரமேஷ் பத்திரண - News View

Breaking

Tuesday, July 27, 2021

உரப் பிரச்சினையால் தேயிலை துறைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்கிறார் ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

இரசாயன உரப் பிரச்சினை காரணமாக தேயிலை துறைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. ஏற்கனவே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன உரம் தொழிற்சாலைக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் தற்போதும் தேயிலை துறைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

ஏற்கனவே களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உரம் தொழிற்சாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பகிர்ந்தளிக்கும் போது ஒட்டு மொத்தமாக வழங்காது குறிப்பிட்ட தொகைக்கு அமையவே வழங்கப்படும். எனவே தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி என்பவற்றில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. தேயிலை ஏற்றுமதியின் இலங்கையே முன்னணி நாடாகத் திகழ்கிறது என்றார்.

No comments:

Post a Comment