ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பினால் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பினால் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

(நா.தனுஜா)

அண்மைக் காலத்தில் ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுவதுடன் அவர்களுடைய ஊடகத்துறை செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் முகங்கொடுத்திருக்கும் இத்தகைய நெருக்கடிகளை இல்லாமல் செய்வதற்கும் அவர்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறு பிரயோகிக்கப்படும் அழுத்தம் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் மற்றும் தமிழ் ஊடக ஒன்றியம் ஆகிய 6 அமைப்புக்களின் ஒன்றிணைவான ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பினால் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad