பால்மா இறக்குமதியை 70 வீதம் குறைப்பதற்கு நிறுவனங்கள் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 23, 2021

பால்மா இறக்குமதியை 70 வீதம் குறைப்பதற்கு நிறுவனங்கள் தீர்மானம்

இறக்குமதி செய்யப்படும் 70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் வணிக வங்கிகளில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பால்மா விலைகளை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

உலக சந்தையில் பால்மா வகைகளின் விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் அதிகரிப்பு, டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி என்பன காரணமாக பால்மா வகைகளின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 

எனினும் அதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. நாட்டில் நாள் ஒன்றில் 200 மெற்றிக் தொன் பால்மா பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment