வெள்ளம் குறித்து செய்தி சேகரிக்கும் சர்வதேச ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் சீனா - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

வெள்ளம் குறித்து செய்தி சேகரிக்கும் சர்வதேச ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் சீனா

(ஏ.என்.ஐ)

சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழையுடனான வெள்ளிப் பெருக்கினால் அங்கு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை செய்தி சேகரிக்க செல்லும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுவதோடு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஹெனான் மாகாணத்தின் ஜெங்ஜோ நகரத்தில் இவ்வாறு ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

மறுப்புறம் சீன நகரங்கள் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கைக் எதிர்க்கொண்டுள்ளதால் சர்வதேச ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் விமர்சிக்கும் வகையில் கடும் பதிவுகளை சீன சமூக ஊடக தளமான வெய்போ பதிவேற்றியுள்ளதாக ஹாங்காங் ஃப்ரீ பிரஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பிபிசியின் சீனா நிருபர் ராபின் பிராண்டை இலக்காகக் கொண்டதாகவே குறித்த விமர்சனங்கள் உள்ளன.

சீன வெள்ளம் குறித்த போலியான வதந்திகளை பரப்பும் வெளிநாட்டவர் என்றும் அவரது செய்திகளில் உண்மை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியே சீன சமூக ஊடக தளம் விமர்சனங்களை பதிவேற்றி வருகின்றது. 

அதேபோன்று அந்த ஊடகவியலாளரை கண்டால் பொலிசாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதே போன்று பாதிக்கப்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் தமக்கு ஏற்பட்ட நிலைமைகள் குறித்து குறிப்பிட்டுள்ளனர். தான் ஒரு கெட்டவன் என்றும், சீனாவைப் பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் தன்னை சூழ்ந்த சிலர் அச்சுறுத்தியதாக லா டைம்ஸ் ஆலிஸ் மற்றும் டோய்ச் வெல்ஸ் ஆகிய ஊடகங்களின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போன்று அல் ஜசீரா மற்றும் அசோசியேட்டட் பிரஸ் (ஏ.பி) ஆகிய சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களானது சீனாவின் வெளிநாட்டு ஊடகங்கள் மீதான சினத்தையும் சந்தேகத்தையும் அதிகரிப்பதற்கான நிலைமைகளாகவே காணப்படுவதாக பல சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

ஆனால் இவ்வகையான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சீன தரப்புகள் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment