டெல்டா திரிபு குறித்து சுகாதாரத் துறையினர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிடின் நாடு அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
“தொடர்ச்சியாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான கொவிட்19 தொற்றாளர்களே எமது நாட்டில் பதிவாகி வருகின்றனர். நாட்டின் பல்வேறு பாகங்களிலும் டொல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டொல்டா திரிபு தொடர்பில் அனைத்து பிரதேசங்களிலும் உரிய ஆய்வுகளை நடத்தப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றோம்.
டொல்டா திரிபு தொடர்பில் சரியான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். தற்போதைய கொவிட் ஒழிப்புச் செயற்பாடுகளில் டொல்டா திரிபு தொடர்பாக கூடிய அவதானம் செலுத்தப்படவில்லை.
கடந்த காலத்தில் இடம்பெற்ற சாதாரணமான வேலைத்திட்டத்தின் ஊடாகவே டெல்டா திரிபு குறித்தும் சுகாதாரத் துறையினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
டொல்டா திரிபு குறித்து பொறுப்புடன் நாம் பணியாற்றா விடின் மிகவும் ஆபத்து மிக்க நிலைக்கு நாடு தள்ளப்படும். ஆகவே, இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அதற்கான ஒத்துழைப்புகளை பொது சுகாதார பரிசோதகர்கள் வழங்க தயாராக உள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment