கடற்படையினர் கடந்த மூன்று தினங்களில் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள 2000 கிலோவுக்கும் அதிகமான மஞ்சளை கைப்பற்றியுள்ளனர்.
இவ் சட்டவிரோத வர்த்தகத்துடன் தொடர்புபட்ட 6 சந்தேக நபர்களை அவர்கள் கைது செய்துள்ளதுடன் இரண்டு படகுகள் ஒரு வேன், மற்றும் ஒரு முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினர் கடந்த 29, 30 மற்றும் முதலாம் திகதிகளில் மன்னார், அச்சான குளம் கருவிழிகுளம் சவுண்ட் பார் ஆகிய கடல் பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இச் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2021 கிலோ மஞ்சளைக் கைப்பற்றியுள்ளனர்.
கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய கடல் பிரதேசங்களில் கடற்படையினர் தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இம் மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி மீன்பிடி படகு ஒன்றை சோதனையிட்ட கடற்படையினர் அந்த படகிலிருந்து 600 கிலோவுக்கும் மேற்பட்ட மஞ்சளை கைப்பற்றியுள்ளனர்.அதன்போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் படகும் கைப்பற்றப்பட்டது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment