இலங்கை வருகிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

இலங்கை வருகிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுட்ரஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவிட்19 தொற்று பரவல் நிலைமை முடிவுக்கு வந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியபோது, நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

பிலிப்பைன்ஸ் - இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. 

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இலங்கைக்கு தொடர்ச்சியாக பிலிப்பைன்ஸ் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment