புது விளையாட்டின் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றது ஜப்பான் - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

புது விளையாட்டின் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றது ஜப்பான்

டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப் பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூடோ ஹொரிகோம் வென்றார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் ஸ்கேட்போர்ட்டிங் போட்டியில் முதல் பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதேபோல ஸ்கேட்போர்டிங் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் பிரேசிலிய கெல்வின் ஹோஃப்லருக்கு சென்றது. அமெரிக்காவின் ஸ்கேட்டர் ஜோ கர் ஈட்டன் வெண்கலத்தை வென்றார்.

ஸ்கேட்போர்டிங்கின் மிகப்பெரிய நட்சத்திர வீரராக கருதப்படும் அமெரிக்காவின் நைஜா ஹஸ்டன், எட்டு பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் 7ஆவது இடத்தைப் பிடித்து கொண்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே,பிரசாத்

No comments:

Post a Comment