பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாதத்தை போதித்தவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாதத்தை போதித்தவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதுடன் அந்த தாக்குதலின் முக்கியஸ்தராக கருதப்பட கூடிய சஹ்ரானின் சகாக்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் மாவனெல்ல பகுதியில் 32 வயதுடைய நபர் ஒருவர் கை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், பயங்கரவாதி சஹ்ரான் இஸ்லாமிய அடிப்படைவாத போதனைகளை 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளார்.

இந்த அடிப்படைவாத வகுப்புகளுக்கு சென்றவர்களை கைது செய்வது தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதித்த மற்றும் அதனை சார்ந்த வகுப்புகளுக்கு சென்ற 32 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானெல்லை பகுதியில் இன்று கைது செய்யப்பட்ட நபரும் பயங்கரவாதி சஹ்ரானின் இஸ்லாமிய அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்டும் போதித்தும் உள்ளார்.

இணையத்தளத்தை மையப்படுத்தி ஆடை விற்பனையில் ஈடுபடும் சந்தேக நபர் பயங்கரவாத விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad