ஜனாதிபதியின் நேர ஒதுக்கீட்டுக்காக சுதந்திரக் கட்சி காத்துக் கொண்டிருக்கின்றது : ரோஹண லக்ஷ்மன் பியதாச - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

ஜனாதிபதியின் நேர ஒதுக்கீட்டுக்காக சுதந்திரக் கட்சி காத்துக் கொண்டிருக்கின்றது : ரோஹண லக்ஷ்மன் பியதாச

(ஆர்.ராம்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பை நடத்துவதற்கான நேர ஒதுக்கீட்டுக்காக சுதந்திரக் கட்சி காத்துக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் முக்கியமானதொன்றாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காணப்படுகின்றது. இந்நிலையில், அரசாங்கத்துடன் செயற்படுவது தொடர்பில் நடைமுறை ரீதியான சில பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பாக இறுதியாக நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர்.

அதில் சிலர் அரசாங்கத்தினை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்கள். எனினும், தற்போது நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு உடனடியாக எவ்விதமான முடிவுகளும் எடுப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முதற்கட்டமாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவருடைய நேர ஓதுக்கீட்டைப் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad