இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஜூலை 10 வரை சட்டவிரோதமாக சர்வதேச எல்லையை கடந்து நாட்டுக்குள் நுழைந்த 30 பெண்களை கைது செய்துள்ளது.

அதேநேரம் இந்த பெண்களை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டுக்காக 6 இந்தியப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களல் பெரும்பாலான பெண்கள் கடத்தல் காரர்களால் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறிய போலிக் காரணங்களினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கொவிட்-19 தொடர்பான கவலைகள் இரு நாட்டிலும் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறான கடத்தல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டுக்காக எல்லைப் பாதுகாப்புப் படையினர் 2019 இல் 2,175 பங்களாதேஷ் பிரஜைளை கைது செய்தது. அது 2020 ஆம் ஆண்டில் 3,060 ஆக அதிகரித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பெண்கள், அவர்களில் பெரும்பாலானோர் தொழில்வாய்ப்புகள் அல்லது திருமணம் போன்ற சாக்குப் போக்குகள் காரணமாக எல்லையை கடந்தவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad