ஆளும் கட்சியின் துணை கொறடாவாக சாகர காரியவசம் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

ஆளும் கட்சியின் துணை கொறடாவாக சாகர காரியவசம் நியமனம்

ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், அதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து நேற்று பாராளுமன்றத்தில் வைத்து பெற்றுக் கொண்டார்.

பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து இந்நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக ஆளும் கட்சியின் துணை கொறடாவாக பதவி வகித்த ஜயந்த கொட்டகொட அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமரின் மேலதிக செயலாளரும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad