இறுதி நிமிடத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியாவுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி - News View

About Us

About Us

Breaking

Friday, July 23, 2021

இறுதி நிமிடத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியாவுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி

கொவிட்-19 கவலைகள் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பார்படோஸில் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இடைநிறுத்தப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியானது மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரண்டாவது போட்டி ஜூலை 22 (இலங்கை நேரப்படி இன்று) நடைபெறவிருந்தது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தகவல் வெளியான நிலையில், ஒரு பந்து கூட வீசப்படாது, போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் மைதானத்தில் இருந்த இரு அணி வீரர்களும் மற்றும் ஊழியர்களும் பாதுகாப்பு குமிழியின் கீழ் ஹோட்டல் அறைகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் அனைத்து உறுப்பினர்கள், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சோதனை முடிவுகள் தெரிந்தவுடன் போட்டி எப்போது மறு தொடக்கம் செய்யப்படும் என்பது குறித்த முடிவு எடுக்கப்படும். அது வரை அனைவரும் அவர்களது அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment