(எம்.எப்.எம்.பஸீர்)
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாப் ஜஸீமை தடுப்புக்காவல் விசாரணையின் பின்னர் மன்றில் ஆஜர் செய்யும் போது, அவர் தொடர்பில் விசாரணை செய்யப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிவானுக்கு அறிக்கை ஊடாக அரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 12 ஆம் திகதி மன்றில் ஆஜர் செய்யும் போது மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக இதனை அறிவித்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், வீடியோ காட்டி மணவர்களை அஹ்னாப் வன்முறைக்கு தூண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
உலகளாவிய ரீதியில், குறிப்பாக மியன்மார், சிரியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் அதற்கெதிராகப் போராட வேண்டும் என்றுகூறி ஐ.எஸ் அமைப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய காணொளிகளை மாணவர்களுக்குக் காண்பித்ததுடன் அவ்வாறு மதத்திற்காகப் போராடினால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்றும் கூறியதாகவும் அஹ்னாப் ஜசீமிற்கு எதிராகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி 'நவரசம்' வன்முறைகளை நோக்கி மாணவர்களைத் தூண்டுவதாக உளவியலாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இதன்போது விசாரணையாளர்கள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
மேலும் முக்கியமாக அஹ்னாப் ஜசீம் தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதன் காரணமாக அவரை ஏனைய சிறைக் கைதிகளிலிருந்து தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அஹ்னாப் ஜசீம், சிரையில் உள்ள ஏனைய கைதிகளுக்கு அடிப்படைவாதத்தைப் போதிக்கக்கூடும் என்றும் விசாரணையாளர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இதுவரை குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணையாளர்களால் எந்த சாட்சிகளும் மன்றில் சமர்ப்பிக்கப்ப்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment