சீனாவின் தயாரிப்பான சீனாபோர்ம் தடுப்பூசியின் மேலும் ஒரு மில்லியன் டோஸ் பங்குகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்ததாக, மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
பீஜிங்கிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலாக இவை இன்று அதிகாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி டோஸ்கள் பின்னர் விமானத்திலிருந்து இறக்கம் செய்யப்பட்டு, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் கொழும்பில் உள்ள மத்திய கிடங்கு வளாகத்திற்கு உறைவிப்பான் லொறிகள் மூலம் கொண்டு பாதுகாப்பாக செல்லப்பட்டது.
இந்த வார தொடக்கத்தில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், இலங்கை அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்ட சீனாபோர்ம் தடுப்பூசியின் இரண்டு மில்லியன் டோஸ் வாரத்திற்குள் நாட்டை வந்தடையும் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment