சிறுவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்கிறார் எரான் விக்ரமரத்ன - News View

Breaking

Tuesday, July 27, 2021

சிறுவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்கிறார் எரான் விக்ரமரத்ன

(நா.தனுஜா)

இலங்கையில் 51 வகையான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் வகையிலான சட்டம் நடைமுறையிலுள்ள போதிலும், அதில் வீடுகளில் சிறுவர்களைப் பணிக்கமர்த்துதல் உள்ளடக்கப்படவில்லை. இந்நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள சிறுவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதான ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவமானது நாடளாவிய ரீதியில் அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கின்றது.

இச்சம்பவத்தையடுத்து பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்தும் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதற்கு எதிரான சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment