தனியார் கல்வி நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் : முகக்கவசம் அணிவது ஒவ்வொருவரதும் கடமை - கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

தனியார் கல்வி நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் : முகக்கவசம் அணிவது ஒவ்வொருவரதும் கடமை - கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

தனியார் கல்வி நிலையங்களைப் பொறுத்தமட்டில் சூம் தொழிநுட்பத்தில்தான் படிப்பிற்பதாக அறிய கிடைத்தது. இரகசியமான மீறல்கள் கட்டாயம் இருக்கும். அவ்வாறு மீறப்படுமாயின், இவர்களது வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, கல்முனை மாநகர சபை எல்லைக்குள் தற்போது திறக்கப்பட்டுள்ள சந்தைகளில் பூரணமாக கொரோனா சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறுவது போலியான குற்றச்சாட்டாகும்.

முகக்கவசம் அணிவது ஒவ்வொருவரதும் கடமையாகும். முகக்கவசத்தை எம்மால் எல்லோருக்கும் கொடுக்கவும் முடியாது. முகக்கவசமில்லாது வருபவர்களை பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் கைது செய்வார்கள்.

இது தவிர, சந்தையில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளோம். எனவே, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மக்களின் பொறுப்பாகும். நாங்கள் இதற்காக ஒவ்வொருவரையும் பார்த்து பரிசோதித்துக் கொண்டிருக்க முடியாது. சுகாதார நடைமுறைகளை சுகாதாரத் துறையினர்தான் கண்காணிக்க வேண்டும்.

தனியார் கல்வி நிலையங்களைப் பொறுத்தமட்டில் சூம் தொழிநுட்பத்தில்தான் படிப்பிற்பதாக அறிய கிடைத்தது. இரகசியமான மீறல்கள் கட்டாயம் இருக்கும். அவ்வாறு மீறப்படுமாயின், இவர்களது வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment