இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் மாற்றம் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் மாற்றம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டித் தொடர்களை சில தினங்களுக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஒரு நாள் போட்டித் தொடரை இம்மாதம் 18 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியை 20 ஆம் திகதிக்கும், இறுதி ஒரு நாள் போட்டியை 23 ஆம் திகதிக்கும் பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இருபதுக்கு 20 போட்டிகள் இம்மாதம் 25, 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவர் மற்றும் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி நிரோஷன் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறு போட்டித் தொடரை பிற்போட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad