இலங்கை கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று

இலங்கை கிரிக்கெட் வீரர் சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக தனித்தனியாக பயிற்சி பெற்ற குழாமொன்றில் அவர் சந்துன் வீரக்கொடி அங்கம் வகித்திருந்தார்.

பயிற்சி பெற்ற 15 மூத்த கிரிக்கெட் வீரர்களுள் சந்துன் வீரக்கொடியும் ஒருவராவார். வீரக்கொடி கடந்த 2017 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியே இறுதி சர்வதேச போட்டியாகும்.

இதேவேளை, இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல், அந்த அணியின் உதவி ஊழியர் (வீரர்களின் ஆட்டம் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்பவர்) ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad