சீனா - பாகிஸ்தான் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஒரே நில வழியைத் திறக்க தயங்கம் காட்டும் பெய்ஜிங் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

சீனா - பாகிஸ்தான் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஒரே நில வழியைத் திறக்க தயங்கம் காட்டும் பெய்ஜிங்

(ஏ.என்.ஐ)

பாகிஸ்தான் குன்ஜெராப் எல்லை வழியாக வர்த்தகத்தை அனுமதிக்க இரு அரசாங்கங்களுக்கிடையில் உடன்பாடு இருந்த போதிலும், கொவிட்-19 தொற்று நோயால் சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஒரே நில வழியைத் திறக்க பெய்ஜிங் தயக்கம் காட்டி வருகின்றது.

2021 மே 1ஆம் திகத்திற்குள் குஞ்சேராப் எல்லையை வர்த்தகத்திற்காக திறக்க சீனா ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது கொவிட் வைரஸ் பரவல் நிலையை சுட்டிக்காட்டி தயக்கம் காட்டுகின்றது. இதனை மையப்படுத்தி இரு தரப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த சீனா தவறி விட்டது என்று பாகிஸ்தான் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

2021 ஜூலை 12 ஆம் திகதிக்குள் சீனா பொருட்களை எல்லை தாண்ட அனுமதிக்கக் கூடும். ஆனால் அதன் உறுதியாக நிலைப்பாடு குறித்து தெரியவில்லை' என்று சீன அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்திய ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாவேத் உசேன் தெரிவித்தார்.

ஜூலை 3 ஆம் திகதி எல்லை திறக்கப்படும் என்று ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு சாதகமான எந்த நிலைமையும் இதுவரையில் இல்லை. மாறாக புதிய திகதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் உறுதிப்பாடு குறித்தும் தெளிவில்லை. எனவே ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்படுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த பாதை வழியாக பாகிஸ்தான் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்காததால் ஏற்றுமதியாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மறுபுறம் இறக்குமதிக்கு மாத்திரம் எல்லை திறக்கப்படுவது எவ்விதத்தில் நியாயமாகும் என வர்த்தக சங்கத்தினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டர் உயரத்தில் குஞ்சேராப் பகுதியுள்ளது. காஷ்மீரை ஒட்டியுள்ள இந்த பகுதி சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு முக்கிய வர்த்தக பாதையாகும், மேலும் தெற்காசியா மற்றும் ஐரோப்பாவிற்கான முக்கியமான நுழைவாயிலாகவும் இது அமைகின்றது.

ஆடை மற்றும் விவசாய பொருட்கள் உட்பட பல பொருட்களை சீனா இந்த பகுதியூடாக இறக்குமதி செய்கிறது. மேலும் தாவரங்கள் மற்றும் மூலிகைகள் ஏற்றுமதி செய்கிறது.

எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் மக்கள் பரிமாற்றங்களுக்கு வசதியாக எல்லையை மீண்டும் திறக்குமாறு இஸ்லாமாபாத் சீனாவிடம் கோரியிருந்தது.

எல்லையின் இரு புறமும் உள்ள உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கமான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் இரு தரப்பு மக்கள் வர்த்தக பரிமாற்றங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டியது அவசியம் என்பதை பாக்கிஸ்தான் வலியுறுத்தியிருந்த போதிலும் இதுவரையில் அப்பகுதி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad