போதைப் பொருட்களுடன் தொடர்புபட்ட வழக்குகளுக்கு ஆதரவாக தெரிபடுவதில்லை என வாழைச்சேனை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் - News View

Breaking

Thursday, July 29, 2021

போதைப் பொருட்களுடன் தொடர்புபட்ட வழக்குகளுக்கு ஆதரவாக தெரிபடுவதில்லை என வாழைச்சேனை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

போதைப் பொருள் வழக்குகளுக்கு ஆதரவாக தெரிபடுவதில்லை என வாழைச்சேனை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் அதிரடித் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதாக வாழைச்சேனை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஹபீப் றிபான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்குடாப் பிரதேசத்தில் போதைவஸ்து விற்பனை மற்றும் பாவனைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமெனும் நோக்கில் சட்டத்தரணிகள் சங்கத்தின் விஷேட கூட்டம் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம்.றம்ஸின் ஏற்பாட்டில் கடந்த 19.07.2021ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.

இவ்விஷேட கூட்டத்தில், சமூக நலன்கருதி எதிர்காலச் சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனும் நோக்கில் முதற்கட்டமாக போதைவஸ்துக்களுடன் தொடர்புபட்ட போதை வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்களுக்கெதிரான வழக்குகளில் ஆதரவாக தெரிபடுவதில்லை என ஏகோபித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

குறித்த தீர்மானத்தை ஆரம்பகட்டச் செயற்பாடாக முன்னெடுத்துள்ளதுடன், இத்தீர்மானம் போதைவஸ்து பாவனையினைக் கட்டுப்படுத்துவதில் சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதனை ஆராய்ந்து, எதிர்காலத்தில் இது தொடர்பிலான காத்திரமான தீர்மானங்களை எடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment