போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது : லிட்ரோ எரிவாயு நிறுவனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது : லிட்ரோ எரிவாயு நிறுவனம்

போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் அனைத்து வகையான சிலிண்டர்களுக்கும் அதனை நிரப்பிக் கொடுப்பதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

LAUGFS எரிவாயு நிறுவனமானது எரிவாயு கொள்வனவை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ இதனை கூறியதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

போதியளவு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக ரீதியிலான இயலுமையும் விநியோகத் திட்டமும் தமது நிறுவனத்திடம் இருப்பதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுலனத் தலைவர் கூறியுள்ளார்.

சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட சந்தர்ப்பமளிக்கப்பட மாட்டாதென சுட்டிக்காட்டியுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர், எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad