டயகம சிறுமியின் மரணத்திற்கான உண்மையை வெளிப்படுத்தப்படுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

டயகம சிறுமியின் மரணத்திற்கான உண்மையை வெளிப்படுத்தப்படுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப் பெண்ணாக தொழில் புரிந்து எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் உயிரிழப்பிற்கான உண்மை காரணம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையக வாழ் சமூகம் கொழும்பு என்ற அமைப்பினால் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மலையக வாழ் சமூகம் கொழும்பு அமைப்பின் தலைவர் தோமஸ் அமரதாஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கான உண்மை காரணி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு , அதற்கான நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

மலையக வாழ் சமூகம் கொழும்பு அமைப்பின் உறுப்பினரொருவர் கருத்து வெளியிடும் போது , ' மலையக சிறுவர் சிறுமியர் பலர் இதற்கு முன்னரும் இவ்வாறு பல விபத்துக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும் அதற்காக மலையக அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பது அரிதாகவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad