டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலாவது உலக சாதனையை நிலைநாட்டியது அவுஸ்திரேலியா..! - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலாவது உலக சாதனையை நிலைநாட்டியது அவுஸ்திரேலியா..!

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மகளிருக்கான நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.

முந்தைய சாதனையும் அவுஸ்திரேலியர்களிடமே இருந்தமையும் குறப்பிடத்தக்கது. அதன்படி டோக்கியோ ஒலிம்பிக்கின் முதலாவது உலக சாதனை இதுவென்பதும் விசேட அம்சமாகும்.

மகளிருக்கான 4 x 100 மீற்றர் பிரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3:29.69 நிமிடங்களில் பந்தயத் தூரத்தை நீந்தி, முந்தைய சாதனையிலிருந்து 0,36 செக்கன்களை மீதமாக்கி உலக சாதனை படைத்துள்ளது. அத்தோடு தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தது.

இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை 3:32.78 செக்கன்களில் நீந்திய கனடா அணி வென்றது. அமெரிக்க அணி 3:32.81 செக்கன்களில் பந்தயத் தூரத்தை அடைந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கிக் கொண்டது.

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

No comments:

Post a Comment