கொரோனா தொற்றால் பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

கொரோனா தொற்றால் பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்

மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானதை அடுத்து, பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கு திருத்தப்பட்ட 18 பேர் கொண்ட மாற்று அணியை இங்கிலாந்து பெயரிட்டுள்ளது.

இலங்கையுடனானா வரையறுக்கப்பட்ட கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் திங்களன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 சோதனைகளிலேயே இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன் விளைவாக கொவிட் தொற்றுக்குள்ளான ஏழு பேரும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய ஏனைய வீரர்கள் மற்றும் ஊழியர்களும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுடன் வியாழக்கிழமை கார்டிஃப் நகரில் ஆரம்பமாகவும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் முன்னணி ஒன்பது வீரர்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.பி.எல். இல் விளையாடும்போது விரல் ஏற்பட்ட முறிவினால் ஓய்விலிருந்து சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால், டேனி பிரிக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், லூயிஸ் கிரிகோரி, டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டேனியல் லாரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், மாட் பார்கின்சன், டேவிட் பெய்ன், பில் சால்ட் , ஜான் சிம்ப்சன் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ்.

No comments:

Post a Comment