சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அஜித் ரோஹண நியமனம் - News View

Breaking

Thursday, July 29, 2021

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அஜித் ரோஹண நியமனம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 21 முதல் அமுலுக்கு வரும் வகையில், 3 வருடங்களுக்கு ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment