பாப்பரசருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

பாப்பரசருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

பெருங்குடல் பிரச்சினை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் பாப்பரசர் பிரான்சிஸ் தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்குடல் சுருக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்த 84 வயதான பாப்பரசருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

வத்திக்கானின் சென். பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு இத்தாலி தலைநகர் ரோமில் அமைந்துள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாப்பரசருக்கு டைவர்டிக்யூலிடிஸ் சிகிச்சைகளுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

டைவர்டிக்யூலிடிஸ் ஒரு அழற்சி பாதிப்பால் உண்டாகக் கூடியது. நமது பெருங்குடல் சுவரில் டைவர்டிகுலா என்ற பை இருக்கும். இந்த பைகளில் வீக்கம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது. இப்படி வீக்கம் ஏற்படுவதால் இடது அடி வயிற்றில் அடிக்கடி வலி உண்டாக ஆரம்பிக்கும்.

இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா, பாப்பரசர் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டும் என செய்தி வெளியிட்டிருந்தார்.

"அனைத்து இத்தாலியர்கள் மற்றும் எனது சார்பாக, உங்கள் புனிதத்தன்மைக்கு எங்கள் அன்பான அன்பையும், நலமாக குணமடைவதற்கும், விரைவாக மீள்வதற்கும் மிகவும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம்" என்று போப் பிரான்சிஸுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment