சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறியின் கருத்து கவலைக்குரியது, அமைச்சரவை பெயர் விடயத்தில் பஷில் தலையிடவில்லை என்கிறார் ஜோண்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறியின் கருத்து கவலைக்குரியது, அமைச்சரவை பெயர் விடயத்தில் பஷில் தலையிடவில்லை என்கிறார் ஜோண்ஸ்டன்

(இராஜதுறை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கருத்து கவலைக்குரியது. சுதந்திர கட்சியில் காணப்படும் உள்ளக பிரச்சினைகளில் பிற தரப்பினர் மீது பழி சுமத்துவது பொறுத்தமற்றது. அமைச்சரவை பெயர் குறிப்பிடும் விடயத்தில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலையிடவில்லை என நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

குருநாகலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நகைச்சுவையான அமைச்சு பதவிகளை வழங்கியுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

ஜனாதிபதியின் செயலாளரையும், பஷிலையும் பற்றிக் கூறும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் இணைந்து பணிபுரிய தயார் என கூறுவதாகவும் இவர்கள் அனைவரும் ஒன்று என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

பதவிகளை பகிர்ந்து கொள்வது அவர்களின் கட்சிப் பிரச்சினையாகும். அவ்விடத்தில் பிற தரப்பினர் மீது பழி சுமத்துவது பொருத்தமற்றதாகும். இவ்வாறானவர்களின் அரசியல் அறிவு குறித்து நாம் புதுமையடையவில்லை. இவர்களின் இவ்வாறன முற்போற்கான கருத்தை 2015 ஆம்ஆண்டும் கேட்டுள்ளோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இறப்பர் முத்திரைகளில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயத்தை முழுமையாக நிராகரிக்கின்றோம்.

கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களை எவ்வாறு கவனித்தார்கள் என்று எமக்கு தெரியும். இன்று இராஜாங்க அமைச்சர்களின் அதிகாரங்கள் வர்த்தமானியில் வெளியிட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியும்,  பிரதமரும் சரியான தீர்மானத்தை எடுத்து செயற்படுகின்றனர்.

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இவ்வாறு கருத்துகளை தெரிவித்தாலும் மக்கள் அதனை ஏற்கமாட்டார்கள். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்து கவலைக்குரியது. அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment