ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா : இலங்கை வீராங்கனை முதல் சுற்றிலேயே வெளியேற்றம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 24, 2021

ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா : இலங்கை வீராங்கனை முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா. மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலிலேயே முதல் பதக்கத்கத்தை சீனா தட்டிச் சென்றது.

இதே பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனையான தெஹானி எகொடவெல முதல் சுற்றிலேயே வெளியேறினார். இதில் இவர் 49 ஆவது இடத்தைப் பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று கோலகலமாக ஆரம்பமானது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கேறும் இந்தப் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரங்கேறி வருகின்றன.

அதன்படி மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் குயான் தங்கப் பதக்கம் வென்றார்.

ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

கொரோனா அச்­சு­றுத்தல் கார­ண­மாக பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்­க­ளுக்­கான பதக்­கத்தை தாங்­களே எடுத்து அணிந்­து­ கொள்ள வேண்டும்.

அதன்­படி டோக்­கியோ ஒலிம்­பிக்கில் முதல் தங்­கப்­ ப­தக்கம் வென்ற சீன வீராங்­கனை பதக்­கத்தை தானே எடுத்து அணிந்து கொண்டு அதிலும் வரலாற்றுப் பதிவை உருவாக்கினார்.

No comments:

Post a Comment