(எம்.ரீ.எம்.பாரிஸ்)
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதுடன், சுகாதாரத் துறையினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் நாட்டில் சேவையாற்றி வருவதாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும், நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் 39வது மாதாந்த சபை அமர்வு கடந்த 29-06-2021ம் திகதி செவ்வாய்க்கிழமை நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீம் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது இக்கருத்துக்களை அவர் வெளியீட்டார்.
மேலும் அவர் ஏறாவூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இக்கட்டான இச்சூழ்நிலையில் பிரதேச மக்களின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்களை மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றமை பாராட்டத்தக்கது எனக்குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் நகர சபையினால் முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment