இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா ! பிற்போடப்பட்டது போட்டி - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா ! பிற்போடப்பட்டது போட்டி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான குர்ணல் பாண்ட்யாவுக்கு கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த போட்டி இன்று (27) இரவு 8.00 மணிக்கு கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மேற்கொண்ட PCR சோதனையில் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

சகல துறை ஆட்டக்காரரான அவருடன் நெருக்கமான தொடர்பைக் கொண்ட இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிரியல் குமிழிக்குள் (Bio-Bubble) சுகாதார பாதுகாப்பு வளையத்திற்கு இருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில், அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றர்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் இந்திய அணி வீரர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு, கொவிட்-19 தொற்று அணிக்குள் பரவியுள்ள நிலை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதனை தொடர்ந்து வரும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என்னும் கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இன்றைய இரண்டாவது ரி20 போட்டியை இரு அணிகளும் ஆவலுடன் சந்திக்கவிருந்த நிலையில், இந்திய வீரர் குர்ணல் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக, குர்ணால் பாண்ட்யா, நேற்றையதினம் (26) தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment