நாட்டு மக்களின் முறைப்பாட்டை சபையில் முன்வைத்தார் அனுரகுமார திசாநாயக - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

நாட்டு மக்களின் முறைப்பாட்டை சபையில் முன்வைத்தார் அனுரகுமார திசாநாயக

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நியாயமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வோம் என அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயத்தை நாட்டில் சகல மக்களின் முறைப்பாடாக முன்வைகின்றேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் பொதுமக்கள் முறைப்பாடொன்றாக முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, பொதுமக்கள் முறைப்பாட்டு நேரத்தில், அனுரகுமார திசாநாயக எம்.பி தனது முறைப்பாட்டு முன்வைக்க எழுந்த வேளையில், நாட்டு மக்களின் ஒட்டு மொத்த முறைப்பாடாக தான் ஒரு முறைப்பாட்டை முன்வைப்பதாக கூறி 'கடுவலையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சரத் வீரசேகர மூலமாக சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ள கைதுகள் எவ்வாறு இருந்தாலும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வோம் என கூறும் விடயத்தை சபையில் முறைப்பாடாக முன்வைக்கின்றோம்.

நீங்கள் கைது செய்தாலும் நாம் ஆர்ப்பாட்டங்களை செய்வோம். நீங்கள் நினைக்கின்ற விடயங்களை எல்லாம் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியாது. இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியல் அமைப்பு மற்றும் சட்ட திருத்தங்களே சட்டமாகும். ஆகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களுக்கு அமைய நாம் பார்த்துக் கொள்கின்றோம் என்றார்.

இதன்போது ஆளும் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து தலையிட்ட சபாநாயகர், நீங்கள் வேறு காரணிகளை இங்கு கூறிக் கொண்டிருக்காது முறைப்பாட்டை முன்வையுங்கள். இல்லையேல் அடுத்த நபருக்கான வாய்ப்பை கொடுப்பேன் என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த அனுரகுமார எம்.பி, இதுதான் இன்று முழு நாட்டு மக்களும் முன்வைக்கும் முறைப்படாகும். ஆகவே நாட்டில் சகல மக்களின் முறைப்பாட்டையும் நான் இங்கு முன்வைகின்றேன் எனக் கூறியதுடன் தனக்கு கிடைத்த பிரஜை ஒருவரின் முறைப்பாட்டை சபையில் முன்வைத்தார்.

No comments:

Post a Comment