பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எங்கும் பரிந்துரைக்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எங்கும் பரிந்துரைக்கவில்லை

(எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் எங்கும் பரிந்துரைக்கவில்லை. ஒருசில தமிழ் பத்திரிகைகளில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யாகும் என ஆணைக்குழு நேற்று சுட்டிக்காடியது.

முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று கலாநிதி ஜஹான் பெரேரா சாட்சியமளிக்கையில் இடையில் குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கூடாது என இடைக்கால அறிக்கையில் ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக ஒரு சில இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது முற்றிலும் பொய்யான செய்தியாகும் என சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து தெளிவுபடுத்துகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆணைக்குழு இரண்டு விதமான பரிந்துரைகளை செய்திருக்கின்றது.

ஒன்று குருகிய கால திட்டம் மற்றது நீண்ட கால திட்டம். குருகிய கால திட்டமாக, யாரேனும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், அவர் தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் குழு அமைக்கப்படவேண்டும்.

ஆலோசனைக்குழுவின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி குறித்த நபரை தடுப்புக் காவலில் நீண்ட காலம் வைக்காமல் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடல், அதேபோன்று நீண்ட காலம் ஒருவரை தடுப்புக் காவில் வைத்துக் கொண்டிருக்காமல் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் உடனடியாக வழக்கு தொடுக்கவும் இல்லாவிட்டால் அவரை விடுவிக்க வேண்டும் போன்ற உடடியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரை செய்திருக்கின்றது.

No comments:

Post a Comment