இஸ்ரோவின் ககன்யானுக்கான விகாஸ் எஞ்சின் சோதனை வெற்றி : வாழ்த்து தெரிவித்தார் எலோன் மஸ்க் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

இஸ்ரோவின் ககன்யானுக்கான விகாஸ் எஞ்சின் சோதனை வெற்றி : வாழ்த்து தெரிவித்தார் எலோன் மஸ்க்

ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விகாஸ் எஞ்சினின் மூன்றாவது நீண்ட கால சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த வாழ்த்து செய்தியில் இந்திய தேசிய கொடியினையும் பதிவேற்றியுள்ளார்.

தமிழ் நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிலையத்தின் சோதனைக்கு உட்படுத்தப்படும் இயந்திரம் 240 விநாடிகளில் செயற்பாட கூடியது. இயந்திரத்தின் செயல்திறன் சோதனை நோக்கங்களை பூர்த்தி செய்து சோதனையின் முழு காலத்திலும் என்ஜின் அளவுருக்கள் கணிப்புகளுடன் நெருக்கமாக பொருந்துவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் ஏவுதளத்தின் மூன்று நிலைகளில் ஒன்றின் இறுதி சோதனை இதுவாகும். இது மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் பணியில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

ககன்யான் என்பது இஸ்ரோவின் முக்கிய திட்டமாகும். இது மனிதர்களை விண்வெளிக்கு, குறைந்த பூமியின் சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்லும். இதன் பிரகாரம் இதன் முதற்கட்ட சோதனை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இரண்டாவது கட்டம் 2022 மற்றும் 2023 இல் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டன் மற்றும் மூன்று விங் கமாண்டர்கள் உட்பட நான்கு இந்திய விமானப்படை ஏற்கனவே ரஷ்யாவின் ஸ்வியோஸ்ட்னி கோரோடோக் நகரில் தங்கள் ஓராண்டு பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர்.

மேலும் ரஷ்யா மற்றும் பிரான்சில் இரு அறுவை சிகிச்சை நிபுணர்களும் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரோவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விண்வெளித் திட்டம் 2018 ஆகஸ்ட் 15 பிரதமர் நரேந்திர மோடியால் முறையாக அறிவிக்கப்பட்டது. ஆரம்ப இலக்கு 2022 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் மனித விண் வெளிப் பயணத்தை தொடங்குவதாகும்.

இவ்வாறானதொரு நிலையில் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்களை தயாரிக்க உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டுசேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பேஸ் எக்ஸ் தனது அதிவேக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளமையும் முக்கியமானதாகும்.

இந்துஸ்தான் டைம்ஸ்

No comments:

Post a Comment