இங்கிலாந்திலுள்ள நபருக்காக இலங்கையில் கப்பம் பெற சென்ற இருவர் கைது - News View

Breaking

Wednesday, July 28, 2021

இங்கிலாந்திலுள்ள நபருக்காக இலங்கையில் கப்பம் பெற சென்ற இருவர் கைது

(எம்.மனோசித்ரா)

பெண்ணொருவரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி இங்கிலாந்தில் வசிக்கும் நபரொருவரால் கப்பம் பெற்றுக் கொள்வதற்கு அனுப்பப்பட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினால் நேற்று செவ்வாய்க்கிழமை கொம்பனி வீதி பிரதேசத்தில் வசிக்கும் நபர்கள் இருவர் 7 இலட்சம் ரூபா கப்பம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண்ணொருவர் கடந்த இரு ஆண்டுகளாக நபரொருவருடன் தொடர்பினைப் பேணி வந்துள்ள நிலையில், பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இருவரும் தொடர்பில் இருந்த போது வட்சப் ஊடாக பெற்றுக் கொண்ட குறித்த பெண்ணின் புகைப்படங்களை இங்கிலாந்தில் வசிக்கும் நபர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார்.

புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு சந்தேகநபர் குறித்த பெண்ணிடம் 17 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார். இதன்போது 7 இலட்சம் ரூபாவை தருவதாக பாதிக்கப்பட்ட பெண் குறித்த நபரிடம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment