இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் : வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் : வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு சுலவேசியில் உள்ள மனாடோ நகரில் நில நடுக்கம் 68 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நில நடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

கடந்த ஜனவரி மாதம் சுலவேசியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad