எதிர்க்கட்சிக்கு இன்று கோஷம் எழுப்புவதைத் தவிர வேறு எந்த திறனும் இல்லை - இலங்கையின் ஜனாதிபதியாக பசில் ராஜபக்‌ஷவை உருவாக்க நாட்டு மக்கள் அணிதிரண்டுள்ளனர் : ரஞ்சித் பண்டார எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

எதிர்க்கட்சிக்கு இன்று கோஷம் எழுப்புவதைத் தவிர வேறு எந்த திறனும் இல்லை - இலங்கையின் ஜனாதிபதியாக பசில் ராஜபக்‌ஷவை உருவாக்க நாட்டு மக்கள் அணிதிரண்டுள்ளனர் : ரஞ்சித் பண்டார எம்.பி

பசில் ராஜபக்ச ஒரு அமைச்சராக நியமனம் பெற்றதன் மூலம், நாட்டின் அடுத்த தசாப்த வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாக மாறுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

'சௌபாக்யா' வாரத்தை முன்னிட்டு நாவலப்பிட்டிய, கரமட என்ற இடத்தில் வீடு ஒன்றைக் கையளிக்கும் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக பசில் ராஜபக்‌ஷவை உருவாக்க நாட்டு மக்கள் அணிதிரண்டுள்ளனர், பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் அமைச்சராக பதவியேற்று நாட்டின் வளர்ச்சியின் முன்னோடியாக மாறும்போது, நாம் அபிவிருத்திகளைக் கண்டுகொள்ள முடியும். 

கிழக்கின் உதயம், திவி நெகும, கம நெகும, வசந்த உதானய, மக நெகும மற்றும் புற நெகும போன்ற பல திட்டங்களை எதிர்பார்க்கலாம். இந்த வளர்ச்சித் திட்டங்களின் முன்னோடி பசில் ராஜபக்ச என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். அடுத்த தசாப்த வளர்ச்சிக்கு பசில் ராஜபக்‌ஷவின் வருகையை நாம் முக்கியமாக கருத வேண்டும்

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின் நாட்டில் பல்வேறு சவால்கள் இருந்தன. அதற்கு மத்தியிலும் கூட, இந்த நாட்டில் ஏராளமான அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. இன்று அதனைவிடப் பாரிய சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளன. 

சர்வதேச நெருக்கடியின் விளைவுகளிலிருந்து எளிதில் தப்ப முடியாது. என்றாலும் இந்த நெருக்கடியை உள்நாட்டில் நாம் எதிர்கொள்ள பசில் ராஜபக்ச போன்ற ஒருவர் தேவை. என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

இன்றைய பாரிய நெருக்கடிக்கு மத்தியிலும்கூட பெரு வீதிகள் அமைக்கப்படுகின்றன. கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக நடவடிக்கைகள் இடம் பெற்றுவருகின்றன. தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன, நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. மக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர், இப்படி பல்வேறு அபிவிருத்திகள் நடந்து வருவது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

ராஜபக்‌ஷ அரசாங்கங்களால் எப்போதும் இதுபோன்ற விடயங்களை சமநிலையில் வைத்திருக்க முடிந்துள்ளது. அதுதான் சீரான வளர்ச்சிக்கான அணுகுமுறையாகும். எதிர்க்கட்சிகளுக்கு தற்போது கோஷங்கள் தேவைப்படுகின்றன. எதிர்க்கட்சிக்கு இன்று கோஷம் எழுப்புவதைத் தவிர வேறு எந்த திறனும் இல்லை என்றார்.

அக்குறணை நிருபர்

No comments:

Post a Comment