நைஜீரிய பாடசாலையில் ஆயுதமேந்திய நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

நைஜீரிய பாடசாலையில் ஆயுதமேந்திய நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றனர்

வடக்கு நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு உறைவிடப் பாடசாலையில் ஆயுதமேந்திய நபர்கள் திங்கட்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.

கடுனா மாநிலத்தில் உள்ள சிக்குன் உள்ளூராட்சி மன்றத்தின் டமிஷி நகரில் உள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையிலேயே மாணவர்கள் இவ்வாறு ஆயுதமேந்திய கடத்தல் காரர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய குழுவினர் திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாடசாலைகயை தாக்கினர். மாணவர்களைக் கடத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டபோது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜலிஜே தெரிவித்தார்.

கொள்ளைக்காரர்களால் கடததப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாக கூறப்படவில்லை. எனினும் குறித்த பாடசாலையில் சுமார் 180 மாணவர்கள் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் கிறிஸ்டியன் அசோசியேஷனின் தலைவரான ஹயாப் சர்வதேச ஊடகங்களிடம், கடத்தலிலிருந்து தப்பித்த 26 மாணவர்கள் திரும்பி வந்ததாக கூறினார்.

எவ்வாறெனினும் தந்திரோபாய பொலிஸ் குழுக்களும், ஆயுதப் படையினரும் கடத்திச் சென்றவர்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடத்துள்ளன.

இது கடந்த ஆறு மாதங்களில் கடுனா மாநிலத்தில் மாணவர்கள் கடத்தப்பட்ட நான்காவது முறையாகவும். இந்த ஆண்டு இதுவரை நைஜீரியாவில் ஏழு கடத்தல்கள் சம்பவங்கள் நடந்துள்ளன.

No comments:

Post a Comment