'பப்பி' என்ற போதைப் பொருள் வியாபாரி கைது - News View

Breaking

Wednesday, July 14, 2021

'பப்பி' என்ற போதைப் பொருள் வியாபாரி கைது

'பப்பி' என்ற போதைப் பொருள் வியாபாரி தங்காலை பகுதியில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதான சந்தேக நபர் துபாயில் வசித்து வரும் போதைப் பொருள் கடத்தல் காரரான, ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தன எனப்படும் நபருக்கு சொந்தமான போதைப் பொருட்களை கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வருபவர்.

இவர் ஒரு மீன்பிடி படகு ஓட்டுநர், சில மாதங்களுக்கு முன்பு கடல் மார்க்கமாக ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்பட் சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக இருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருட்களைத் தவிர, துப்பாக்கிகளையும் அவர் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வந்து ஏழு நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad