இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக அடையாளப்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக அடையாளப்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளராக தன்னை அடையாப்படுத்தி, 12 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தமைக்காக ஒருவர் களனி பகுதியில் கொழும்பு, குற்றத் தடுப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வாகனத்த‍ை இறக்குமதி செய்து பெற்றுத் தருவதாக கூறி பதுளை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

வாகனம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று கூறி போலி அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை காண்பித்து ஏமாற்றியுள்ளார்.

இந் நிலையில் அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment