டோக்கியோ ‍ஒலிம்பிக்கில் பங்கேற்க 20 வீரர்களுக்கு தடை - News View

Breaking

Thursday, July 29, 2021

டோக்கியோ ‍ஒலிம்பிக்கில் பங்கேற்க 20 வீரர்களுக்கு தடை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நைஜீரியாவைச் சேர்ந்த 10 பேர் உட்பட 20 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக ஊக்க மருந்து சோதனை நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி "ஏ பிரிவு" என்று அழைக்கப்படும் நாடுகளிலிருந்து ஒவ்வொரு வீரர்கள் போட்டியில் பங்கேற்க தடை பெற்றுள்ளனர்.

பெலாரஸ், பஹ்ரேன், எத்தியோப்பியா, கென்யா, மொராக்கோ, நைஜீரியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் வீரர்களே தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் பெயர் விபங்கள் வெளியிடப்படவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

No comments:

Post a Comment

Post Bottom Ad