சிலாபம் நகர சபைத் தலைவர் உட்பட இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

சிலாபம் நகர சபைத் தலைவர் உட்பட இருவர் கைது

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபைத் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு 08.45 மணியளவில் சிலாபம் சேதவத்தை பகுதியில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக வலு கூடிய மோட்டார் சைக்கிள்களை செலுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக ஏற்பட்டு வந்த சர்ச்சையால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்று சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad