மூன்றாம் நாடொன்றுடன் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான் பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் இந்தியாவால் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment