தப்பியோடிய கொராேனா தொற்றாளரை பஸ்சில் வைத்து மடக்கிப்பிடித்த பொலிஸார் - News View

Breaking

Tuesday, July 27, 2021

தப்பியோடிய கொராேனா தொற்றாளரை பஸ்சில் வைத்து மடக்கிப்பிடித்த பொலிஸார்

நாவலபிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்19 தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் குருந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

தப்பிச் சென்ற தொற்றாளர் நாவலப்பிட்டி குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

இவர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையின் கொவிட்19 சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே வைத்தியசாலையிலிருந்து கொவிட் தொற்றாளர் நேற்றுமுன்தினம் காலை தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து தொற்றாளர் பயணிகள் பஸ்சில் வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த நிலையில் குருந்துவத்த மேரிவல காவலரணில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டு நோயாளர் காவு வாகனம் மூலம் நாவலப்பிட்டி வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதேவேளை பஸ்ஸில் தொற்றாளருடன் நெருக்கமாக பயணித்த சிலர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(கினிகத்தேனை நிருபர்)

No comments:

Post a Comment