ஈரானுடனான முக்கிய ஆப்கான் எல்லை கடப்பை கைப்பற்றியது தலிபான் - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

ஈரானுடனான முக்கிய ஆப்கான் எல்லை கடப்பை கைப்பற்றியது தலிபான்

ஈரானுடனான மற்றொரு முக்கிய ஆப்கான் எல்லைக் கடப்பை தலிபான் வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஈரானிய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31 க்குள் திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதன் பின்னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னர் தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுடனான எல்லைக் கடப்புகளை கைப்பற்றிய பின்னர், கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய மூன்றாவது எல்லை இதுவாகும்.

மேற்கு ஹெராத் மாகாணத்தில் 'Islam Qala' பகுதியை கடக்கும் இடத்தை வியாழக்கிழமை தலிபான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய காலாவின் எல்லைப் பகுதியில் உள்ள ஆப்கானிய வீரர்கள் - ஆப்கானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு முக்கிய போக்குவரத்து பாதையில் தப்பியோடி தஞ்சம் அடைவதற்காக ஈரானுக்குள் சென்றதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment