உலக அளவில் 75 சதவீதம் கடந்தது டெல்டா வகை கொரோனா - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 23, 2021

உலக அளவில் 75 சதவீதம் கடந்தது டெல்டா வகை கொரோனா - உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, டெல்டா வகை என்று உறுதி செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75% கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தனது அறிக்கையில் உலக சுகாதார ஸ்தாபனம் கவலை தெரிவித்துள்ளது.  

No comments:

Post a Comment